காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய பக்தர்களை கயிறு மூலம் பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினர்.!
விருதுநகர் மாவட்டம், சதுகிரி மலைக்கு ஆடி அமாவாசைக்காக சென்ற பக்தர்கள், காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய நிலையில் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
தேனி மாவட்டத்தில் உள்ள உப்புத்துறை மலைப்பாதை வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், நள்ளிரவில் பெய்த மழையால் யானைக்கஜம் அருவியில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
இதனால் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் 200க்கும் அதிகமான பத்தர்கள் சிக்கிக் கொண்டனர். அங்கிருந்த காவல்துறையினர் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து கயிறு மூலம் பக்தர்கள் மீட்கப்பட்டு வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
Comments